போட்டு கொண்டிருந்த நடைபாதை கிடப்பில் போட்டதால் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 December 2025

போட்டு கொண்டிருந்த நடைபாதை கிடப்பில் போட்டதால் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு


போட்டு கொண்டிருந்த நடைபாதை கிடப்பில் போட்டதால் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு


நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் அமைந்துள்ள சூரட்டி கேத்தி பாலா அருகில் உள்ள மகாலிங்க நகர் பகுதியில் நீண்ட நாட்களாக நடைபாதை போடாமல் இருந்தது. மக்கள் கோரிக்கையை ஏற்று நடைபாதை ஆனது சமீப காலத்தில் போடப்பட்டது. போடப்பட்ட நடைபாதை மக்கள் செல்லும் வழியில் போடாமல் மக்கள் பயன்படுத்தாத இடத்திலும் மிக முக்கியமான இடங்களிலும் நடைபாதையை போடாமல் பாதியிலேயே கிடப்பில் போட்டதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் இது சம்பந்தமாக அதிகரட்டி பேரூராட்சியிடம் பலமுறை தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மற்றும்  மாவட்ட ஆட்சியரிடம் நடைபாதையை சரி செய்ய வேண்டும் மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று மகாலிங்க நகர் ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் கிடப்பில் போட்ட பணியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பதை ஊர் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad