கோத்தகிரி சிட்டிசன் பாரம் பொதுக்குழு கூட்டம்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சிட்டிசன் பாரம் சங்கத்தின் ஆறாவது பொதுக்குழு கூட்டம் கோத்தகிரி நஹார் ஹோட்டலில் நடைபெற்றது கூட்டத்திற்கு தலைவர் ராஜ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் பொது செயலாளர் திரு. முருகன் அவர்கள் வரவேற்றார். கூட்டத்தில் போக்குவரத்து விதி மீறலை தடுக்கவும், பொருட்கள், வாகனங்கள் கொள்ளை போவதை தடுக்கவும் கோத்தகிரி நகரில் சிசிடிவி கேமரா பொருத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. அத்துடன் போக்குவரத்து விளம்பரப் பலகைகள் வைக்கவும் திட்டமிடப்பட்டது. சிறப்பு விருந்தினராக தேயிலை வாரிய இயக்குநர் திரு. ராஜேஷ் சந்தர் அவர்கள் கலந்து கொண்டார். இதற்கு கோத்தகிரி பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கத்தினை அணுகவும் தீர்மானிக்கப்பட்டது. இறுதியில் துணை செயலாளர் அரிமா நந்தகுமார் அவர்கள் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment