எமரால்டு பகுதியில் போக்குவரத்து தடையால் தடையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு பகுதியில் எமரால்டு காவல் நிலையம் அருகே உள்ள பாலத்தில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று (08/12/2024) இந்த சாலையானது காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தற்காலிகமாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்கள். இது ஒரு முக்கிய நெடுஞ்சாலை ஆகும் இந்த தடையினால் பொதுமக்கள் பெரும் அவதிப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
எனவே பொதுமக்கள் தங்களின் பயணத்தை அதற்கேற்றார் போல் நாளை ஒரு தினம் மாற்றி அமைக்குமாறு தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment