நீலகிரி - நடுவட்டத்தில் மனித உரிமைகள் விளக்க கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் யு எஸ் ஐ பி மனித உரிமைகள் அணியின் தலைவர் தேசிய தலைவர் திரு.செல்வ கணேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சி வார்டு 13 தலைவர் யூ எஸ் ஐ பி மனித உரிமைகளின் தலைவர் திரு. இயேசு அவர்களின் தலைமையில் அறிமுகம் கூட்டமானது நடைபெற்றது . இந்த கூட்டத்திற்கு வருகை தந்து இருந்த நடுவட்டம் பேரூராட்சி யூ எஸ் ஐ பி மனித உரிமைகள் அணி தலைவர் திரு. வெங்கடேசன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் நடுவட்டம் யூ எஸ் ஐ பி ஒன்றிய செயலாளர் திரு . சாமன்னன் அவர்களும் இந்த அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டு மனித உரிமைகள் என்றால் என்ன என்ற விளக்கத்தை அளித்தார் இந்த கூட்டத்தில் நடுவட்டம் காவல்துறைக்கு விருது வழங்கப்பட்டது நடுவட்ட பேரூராட்சி மக்கள் சேவையாக மக்களுக்கு பணியாற்றி இருந்த திரு. ஈனாஸ் அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது 13 வது வார்டு கவுன்சிலர் திரு. மயில்வாகனன் அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது நடுவட்ட பேரூராட்சி சேர்மன் திரு. கலியமூர்த்தி அவர்களும் இந்த அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டார் அவருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர் மற்றும் மனித உரிமைகள் யு எஸ் பி அணியில் சேர வந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் இணைந்தனர் அங்கு உறுப்பினர்களாக சேர்ந்த அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது ஊர் பொதுமக்கள் குறைகள் எல்லாம் கேட்கப்பட்டது நடுவட்டம் பஞ்சாயத்து யூ எஸ் ஐ பி தலைவர் திரு .வெங்கடேசன் அவர்கள் மனித உரிமைகளை பற்றி எடுத்து கூறினார் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து பின்னர் தேநீர் வழங்கப்பட்டு அறிமுகம் கூட்டமானது வார்டு தலைவர் திரு. இயேசுவின் தலைமையில் இனிதே நிறைவு பெற்றது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment