தலைமை ஆசிரியரை தாக்கிய புகார்; உடற்கல்வி ஆசிரியர் 'சஸ்பெண்ட்
நீலகிரி மாவட்டம் கூடலுார், ஸ்ரீ மதுரை அரசு பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய புகாரில், உடற்கல்வி ஆசிரியர் 'சஸ்பெண்ட்' உடற் கல்வி ஆசிரியர் தினமும் தாமதமாக வருவதை பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா, கடந்த, 8ம் தேதி அவரிடம் கேட்டபோது, ஆசிரியர் நசீமா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியுள்ளார். பிரச்னை தொடர்பாக, பள்ளி மேலாண்மை குழு சார்பில் கல்வி துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.இது தொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார், உடற்கல்வி ஆசிரியர் நசீமாவை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment