போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்து குறைக்க சாலை விரிவாக்கம் எப்பொழுது கேள்விக்குறியுடன் சமூக ஆர்வலர்கள்.மெத்தனப்போக்கில் நெடுஞ்சாலைத் துறை???
நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக கூடலூர் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் வருட கணக்கில் உள்ளன சாலைகளே இல்லாத ஊர்களுக்கு வாகனங்களுக்கு எதற்கு சாலை வரி சாலை வரி வாங்கிவிட்டு வாகன உரிமையாளர்களை ஏமாற்றும் விதமாக உள்ளது நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே சீருடை அணியவில்லை தலைக்கவசம் அணியவில்லை சீட் பெல்ட் அணியவில்லை வாகனங்களுக்கு காப்பீடு இல்லை இப்படி வித விதமாக அபராதம் விதிக்கும் அரசாங்கம் எங்களிடம் சாலை வரியை வாங்கிவிட்டு எங்களுக்கு தரமான சாலையை கொடுக்காதது ஏன் ஒரு சிறிய கேள்வி, சாலை வரி வாங்கிவிட்டு எங்களை ஏமாற்றிய அரசாங்கத்திற்கு உங்களுக்கு அபராதம் யார் விதிப்பது தரமான சாலை அனைத்து இடங்களிலும் வாகன பார்க்கிங் வசதி கழிப்பிட வசதி குடிப்பதற்கு தூய குடிநீர் வசதி நீலகிரி மாவட்டத்திற்கு மிக அத்தியாவசிய ஒன்றாகும் இதை எப்பொழுது நிறைவேற்றப்படும் இந்த அரசாங்கம் எந்த வசதியும் செய்து தராத அரசாங்கம் நீலகிரி மாவட்டத்திற்கு பசுமை வரி மற்றும் இ-பாஸ் கேள்விக்குறியாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் மனக்குமுறல்கள். பல தரப்பட்ட அரசியல்வாதிகளும் சமூக அலுவலர்களும் இது சம்பந்தமாக பல மனுக்கள் அளித்தும் போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட துறையினர் இதற்கு உடனடி நடவடிக்கை எப்பொழுது என்று காத்திருப்பில் நீலகிரி கூடலூர் சார்ந்த மக்கள் காத்திருக்கின்றனர். குறிப்பாக கூடலூர் பிரதான சாலையான உதகை மைசூர் சாலை உதகை கள்ளிக்கோட்டை சாலை மேல் கூடலூர் பஜார் பகுதிகளில் மிகவும் மோசமான நிலையில் ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத அளவிற்கு குறுகிய சாலையால் போக்குவரத்து நெரிசலும் குண்டும் குழியுமான சாலையாகவும் பல வருடங்களாக இருந்து வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment