நீலகிரி மாவட்ட கிராம பஞ்சாயத்துகளில் மூன்று சென்ட்டுக்கும் குறைவான நிலப்பட்டா உரிமையாளரா
நீலகிரி மாவட்ட கிராம பஞ்சாயத்துகளில் 3 சென்ட், குறைவான நிலப்பட்டா வைத்திருப்பவர்கள் வெறும் ஆயிரம் சதுர அடிக்கு குறைவான வீடுகட்ட அனுமதி பெற வேண்டி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்... கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மிக முக்கியமான பல சிறப்பம்சங்களில் ஒன்று கட்டிட அனுமதி பெற்ற ஒற்றைசாளர போர்டல் மூலமாக விண்ணப்பம் செய்வது இத்தகைய மாபெரும் முன்னேற்றத்தை DTCP துறையுடன் இணைந்து எல்லா மாவட்டங்களுக்கும் உடனடியாக அமல்படுத்தியது.
இனி கட்டிட அனுமதி பெறுவது என்பது தமிழ்நாட்டில் ஒரு எளிய விஷயமாக வேண்டும் என்ற சிந்தனையுடன் கொண்டுவரப்பட்டது ஆனால் அந்த முயற்சியில் ஒரு சிறு குறையாக 95 சதுர மீட்டருக்கு குறைவான கட்டிடங்களை கட்ட வரைபட அனுமதி பெற ஏழைப் பொதுமக்கள் விண்ணப்பிக்கவே முடியாது என்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை.
அதிலும் நம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மட்டும் மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது ஏனெனில் நம் மாவட்டத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள பட்டாக்கள் மூன்று சென்ட்க்கு குறைவான நிளத்தை பெற்ற பட்டாக்கள் எனவே 95 சதுர மீட்டருக்கு குறைவான விண்ணப்பங்களை ஒற்றைசாளரா போர்டல் single window portal மூலமாக விண்ணப்பம் செய்வது என்பது எட்டா கனியாக ஒன்றாக உள்ளது.
எனவே இதனை சீர் செய்ய ஏழைகள் நம்முடைய அடிப்படை அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் மாபெரும் ஆயுதமாம் நமது கிராம சபை தீர்மானம் அதில் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று சென்ட்க்கு குறைவான நிலங்களை கொண்ட பட்டாதாரர்கள் ஆயுதம் சதுர அடிக்கு குறைவான வீடுகட்ட விரும்பினால் இனிவரும் காலங்களில் முதல் கட்டமாக ஏழு பேர் கொண்ட ஒரு பஞ்சாயத்து குழுவை கட்டிட விண்ணப்பம் செய்து 7 நாட்களுக்குள்ளே விண்ணப்பத்தை முறைப்படி உள்ளதா என்பதை பரிசீலித்து அங்கீகரித்தல் அது ஏழை பொது மக்களின் வாழ்வு முன்னேற மிகவும் இன்றியமையாத ஒரு செயலாக கருதப்படும். இந்த செயல் மாவட்டத்தை முன்னேற்றம் அதுவும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட கீழ்த்தட்டு மக்களின் அத்தியாவசிய தேவையாகிய குடியிருப்புகள் சீரமைப்பு செய்யவும் கூரை மாற்றி அமைக்கவும் சிறிதாக பொழுது பார்ப்பது மற்றும் சிறிதாக அவருடைய தேவைக்கு ஏற்றார் போல் பழைய பட்டாக்களில் உள்ள மீதமுள்ள இடங்களில் கட்டிட விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பாதுகாப்புடன் எவ்வளவு கட்டிடம் விரிவுபடுத்த முடியுமோ அந்தக் கட்டிடங்களை கட்டி அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்தை மாற்றிக்கொள்ள ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு இன்று 23 நவம்பர் 2024 இந்த கிராம சபையில் தீர்மானமாகக் கொண்டு ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய தீர்மானத்தை இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் மக்களால் கோரப்பட்டு நீலகிரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் வழிகாட்டுதலின்படி பஞ்சாயத்து தலைவர்கள் துணைத் தலைவர்கள் செயலாளர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நாமும் நிறைவேற்றியதால் இது ஒரு மாபெரும் வரலாறாக அமையும் என கூறப்படுகிறது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment