சாலையில் சூழ்ந்துள்ள புதர் செடிகளால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிப்பு
மூன்று மாநில வாகனங்கள் அதிக அளவில் செல்லும், ஊட்டி - கூடலுார் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்துள்ள புதர் செடிகளால், வளைவுகளில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது.நீலகிரி மாவட்டம் பர்லியார் முதல் குன்னுார், ஊட்டி, பைக்காரா, கூடலுார், கக்கனல்லா வரையிலான சாலை, தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான ஊட்டிக்கு, கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
வாகனங்களில் வரும் சுற்றுலா பயணியர், கூடலுார் முதல் பைக்காரா மற்றும் ஊட்டி வரையிலான சாலையை பயன்படுத்துகின்றனர்.
அதில், கூடலுார் முதல் ஊட்டி வரை தினமும் அரசு பஸ், சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என சராசரியாக, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றனஅதில், 'கூடலுாரில் இருந்து நடுவட்டம், பைக்காரா, சூட்டிங் மட்டம், தலைக்குந்தா,' என, 30 கி.மீ. , சாலையின் இரு புறமும், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு காட்டு செடிகள் வளர்ந்துள்ளன. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விதிகள் குறித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு போர்டுகள் அனைத்தும் புதருக்குள் மறைந்துள்ளன.
இதனால், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர். மேலும், சாலைகளில் ஆங்காங்கே குதிரைகள் , கால்நடைகள் கூட்டமாக நின்று வழிமறிப்பதால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சாலையின் இருபுறம் வளர்ந்துள்ள காட்டு செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment