முதலமைச்சருக்கு நீலகிரி விவசாயிகள் கோரிக்கை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 November 2024

முதலமைச்சருக்கு நீலகிரி விவசாயிகள் கோரிக்கை.


முதலமைச்சருக்கு நீலகிரி விவசாயிகள் கோரிக்கை.


நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் மாண்புமிகு முதலமைச்சருக்கு காய்கறி  விளைவிக்கும் விவசாயிகளின் கோரிக்கைகள்.


1. மானியத்தை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும்.


2 . அனைத்து விவசாயிகளுக்கும் ஐம்பது விழுக்காடு மானியம் வழங்க வேண்டும்.


3 . ஒவ்வொரு ஊரிலும் விளை பொருள்களை சேமிக்க சேமிப்பு கிடங்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.


4 . மானியத்தில் தரும் விதைகளை விவசாயி விரும்பும் விதைகளை தர வேண்டும் .


5.  விவசாயிகளின் விற்பனை  பொருட்களுக்கு கூட்டுறவு மண்டிகளின் ஏழு விழுக்காடு கமிஷன் தொகையை குறைத்து மூன்று விழக்காடாக ஆக்க வேண்டும்.


6 . விளை பொருட்களை மார்கெட்டுக்கு எடுத்து செல்ல பேருந்துகளில் இலவசமாகவும் அதிக இடங்களையும் ஏற்படுத்தி தர வேண்டும்.


7.  தனியார் காரட் மிஷன்களில் காரட் சுத்தம் செய்ய அதிக கட்டணம் வசூலிப்பதால் அரசு காரட் மிஷன்களை நிறுவ வேண்டும்.


8.  நீலகிரி மாவட்டத்தில் எடப்பள்ளியில் நிறுவப்பட்ட வேளாண் சந்தையை உடனே திறக்க வேண்டும் .


9.விவசாயிகளுக்காக நிறுவப்பட்ட வேளாண் சந்தையில் உள்ள கடைகளை வியாபாரிகளுக்கு வாடகைக்கு கொடுத்ததை ரத்து செய்ய வேண்டும்.


10 . நகரங்களில் பால் பூத் ஆங்காங்கே அமைத்து கொடுத்து போல் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு பூத்துகளை அமைத்து தர வேண்டும்.


இப்படி பல கோரிக்கைகளை நீலகிரி விவசாயிகள்  முதலமைச்சரிடம் முறையிடவுள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad