கோத்தகிரியில் கனவான கலைஞர் கனவு இல்ல திட்டம்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சிக்கு உட்பட்ட 278 வீடுகள் முதலமைச்சர் அறிவிப்பால் கலைஞர் கனவு இல்லத்திட்டத்தில் பணி ஆணை கிடைக்கப்பெற்று ஏற்கனவே இருந்த வீட்டை இடித்து கட்டத்துவங்கிய நிலையில் பாதி பணிகள் நிறைவடைந்தும் நிதி கிடைக்கவில்லை என பயணாளர்கள் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் கோத்தகிரியில் பரபரப்பு நிலவியது. கூடியிருந்தவர்களை அதிகாரிகள் நிர்வாக காரணங்களை கூறி பயணாளர்கள் அனைவருக்கும் நிதி கிடைக்கும் என கூறி அனுப்பி வைத்தனர். பயணாளர்கள் கூறுகையில் பலர் வட்டிக்கு கடன் பெற்று வீட்டு வேலை செய்ததாகவும் சிலர் வாழ்விடமின்றி தகர ஷெட் அமைத்து தங்கியுள்ளதாகவும் அரசு பணம் கிடைக்கவில்லை என்றால் கனவு இல்ல திட்டம் கனவாகி விடும் என ஆதங்கம் தெரிவித்தனர். அரசு உடனடியாக பயனாளிகளின் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பது பயனாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment