கோத்தகிரி - குப்பைகள் கூடாரமாகும் ATM கள் விழிப்புணர்வு தேவை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அரசுத்துறையின் கீழ் மற்றும் தனியார்துறை வங்கிகள் செயல்படுகின்றன.மக்கள் 24 மணி நேரமும் பண பரிவர்த்தனை செய்ய வங்கிகள் ஏ டி எம் கள் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் பணம் எடுத்தவுடன் அதைப்பற்றிய விபரம் அடங்கிய சிலிப் பிரிண்ட் செய்யப்பட்டு வருகிறது அதை மக்கள் அந்த வளாகத்தில் வைத்துள்ள குப்பைத்தொட்டிகளில் வீசிவிட்டு செல்வதால் நிரம்பியவுடன் நாய்கள் ஏதோ இருக்கிறது என கலைத்து விடுகிறது ஆகவே குப்பைகள் சிதறி அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
தீர்வு.....
வங்கிகள் வாடிக்கையாளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பணம் எடுக்கும் போது இயந்திரம் கேட்கும் சிலிப் வேண்டுமா வேண்டாமா என்று வரும் போது வேண்டாம் என பதிவிடலாம்.
ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறும் செய்தி வருவதால் சில வங்கிகளை போல் காகிதம் வைப்பதை தவிர்க்கலாம்.
கதவுகள் தள்ளினால் திறந்து மூடும் படி அமைக்கலாம்.
முடிந்தால் காவலாளிகள் நியமிக்கலாம்.
காகிதங்கள் தயாரிக்க மரங்கள் வெட்டப்படும் நிலையில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு காகித உபயோகத்தை குறைக்கலாம்.
சுத்தம் சுகாதாரம் தரும் என்ற உணர்வு ஒவ்வொரு தனி மனிதரிடமும் ஏற்படவேண்டும்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment