20 ஆண்டுகளுக்கு பிறகு எமரால்டு அணை திறப்பு.
நீலகிரி மாவட்டம் குந்தா பகுதி காட்டு குப்பை பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் நீர் மின் உற்பத்தி நிலைய பணிகளுக்காக எமரால்டு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் இன்று (10 தேதி) 11மணியளவில் வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதமாக 30 நாட்களுக்கு திறந்துவிடப்பட்டது . குந்தா மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் முரளி , செயற் பொறியாளர்கள் பிரேம் குமார் , ஜோதிலட்சுமி , உதவி செயற்பொறியாளர்கள் ஆறுமுகம் , நாகேந்திரன் றஆகியோர் அணை நீரை திறந்து வைத்து மலர் தூவினார்கள்.
உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ் , தாசில்தார் கலைச்செல்வி , வருவாய் ஆய்வாளர் அனுராதா , கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்குமார் , இத்தலார் ஊராட்சி தலைவர் பந்தயன் ஆகியோர் பங்கேற்றனர் .
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment