எமரால்டு அணை நவம்பர் 10-ல் திறப்பு.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெய்த தொடர்மழை மற்றும் கனமழையால் அணைத்து அணைகளும் நிறம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. வரும் ஆண்டில் தண்ணீர் தேவை மற்றும் மின்சார தேவைக்கு அணையின் நீரை பயண்படுத்தலாம். இதனால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எமரால்டு அணையின் முழு கொள்ளளவான 184 அடியை எட்டியதால் பாதுகாப்பு கருதியும் மின்சாரம், குடிநீர், விவசாயம் ஆகிய பணிகளுக்காக எமரால்டு அணை நவம்பர் 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு திறக்கப்படுகிறது ஆகவே பொதுமக்கள் மிகுந்த முன்னேற்பாடுகளுடன் ஜாக்கிரதையாக இருக்கும்படி முள்ளிகூர் பஞ்சாயத்து சார்பாகவும், வருவாய்த்துறை சார்பாகவும் ஒலிபெருக்கி மூலம் எமரால்டு பகுதி மக்களுக்கு வாகனங்கள் மூலம் எமரால்டு சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment