தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னெடுப்பில் காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல் பசுமை நீலகிரி 2024 திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவது என திட்டமிடப்பட்டுள்ளது. இதனை ஒட்டி உதகை அருகே உள்ள உல்லத்தி கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் மரம் நடுவதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து மரக்கன்றுகள் தேவை என வேண்டுகோள் விடுத்தனர்.
நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் அவர்களின் அறிவுரைப்படி உதகை வடக்கு வனச்சரகர் ஆயிரம் மரக்கன்றுகளை உல்லத்தி கிராம மக்களுக்கு வழங்கினார். அதனை கிராமத்தில் சேர்க்கும் பணியினை தன்னார்வல்கள் மேற்கொண்டனர். இந்த ஆயிரம் நாற்றுக்களை ஊர் தலைவர்கள் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் குண்டன் ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பிரமணியம் மற்றும் ஊர் பெரியவர்கள் முறைப்படி பெற்றுக் கொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளரும் தமிழக அரசின் பசுமை விருது பெற்றவருமான ஓய்வு பெற்ற ஆசிரியர் கே .ஜே . ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உல்லத்தி அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் ஓடைகாடு நடுநிலைப் பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஓடைக்காடு பள்ளியில் தலைமையாசிரியை சோபா அவர்கள் தலைமை ஏற்று மரக்கன்றுகளைப் பெற்றுக் கொண்டார். மாணவர்களுக்கு காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment