நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு அரசு உயர்நிலை பள்ளியில் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு கார்த்திக் முன்னிலையில் அங்கு படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி மற்றும் பள்ளியில் பணி புரியும் சக ஆசிரியர்கள் கலந்து கொண்டு இந்த போதை விழிப்புணர்வு முகாமினை நடத்தி கொடுத்தனர்.. இந்த முகாமில் மாணவ மாணவிகள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் எவ்வாறு நல்வழியில் செல்ல வேண்டும் மற்றும் சக நண்பர்களோ தெரிந்தவர்களோ உறவினர்களோ போதை பழக்கத்தில் ஈடுபட்டு இருந்திருந்தால் அதிலிருந்து எவ்வாறு அவர்களை விடுவிக்கலாம் என்று பல்வேறு அறிவுரைகளை எமரால்டு காவல் நிலை உதவி ஆய்வாளர் திரு கார்த்திக் அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment