நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க உறுப்பினர்களுக்கு NCMS சில அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது.
உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளை பூண்டு ஏலத்திற்க்கு கொண்டுவரும் விவசாயிகள் தங்களின் ஆதார் கார்டு, பான்கார்டு, ஸ்மார்ட் கார்டு, வங்கி பாஸ் புத்தகம் நகல் கொண்டுவர அறிவுறுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 4 முதல் வெள்ளை பூண்டு ஏலத்தை துவக்கியுள்ள நிலையில் கமிஷன் 7 சதவீதம் மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மண்டிகளில் கமிஷன் 10 சதவீதம் ஆகவே விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தனியார் மண்டிகளில் நீலகிரி விவசாயிகள் விவசாயம் செய்ய முன்பணம் வழங்கப்படுகிறது.
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் (NCMS) இதை பரிசீலித்து நீலகிரி விவசாயிகளுக்கு உதவினால் நீலகிரி விவசாயிகள் பயனடைவார்கள் என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment