தமிழகம் முழுவதிலும் உள்ள வேளாங்கண்ணி மாதா ஆலயங்களில் தற்போது வருடாந்திர திருவிழா நடைபெற்ற வருகிறது. நாகை மாவட்டம் அருகே அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நடைபெற்ற திருவிழாவினை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் மாதா ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊதகை நகரில் பிக் ஷாப் பின்புறம் அமைந்துள்ள பேண்ட் லைன் என்ற பகுதியில் அமைந்திருக்கும் அன்னை வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் திருவிழா இன்று உதகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவணியாக வலம் வந்தது. இத்தேருக்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவின் பாடல்களை பாடியவாறு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக தேர் ஆலயத்திற்கு சென்றடைந்தது.
தமிழக குரல் இணைத்தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.
No comments:
Post a Comment