நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ளது அரசு தாவரவியல் பூங்கா தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோரும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரியில் உதகை அரசு தாவரவியல் பூங்காவை கண்டுகளிக்கின்றனர். மலர் கண்காட்சி நடைபெறும் முதல் சீசன் மாதமான மே யில் கூட்டம் அலைமோதும். தற்போது இரண்டாம் சீசன் நடைபெறும் சமயத்தில் உதகை அரசு தாவரவியல் பூங்கா பற்றிய விபரம் அடங்கிய தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களாக உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment