நீலகிரி மாவட்டத்தில் செய்தியாளர்கள் என்று கூறிக்கொண்டு போலி அடையாள அட்டைகள் வைத்துக்கொண்டு வியாபாரிகள் விவசாயிகள் தொழில்முனைவோரை மிரட்டி பணம் பறிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் காவல்துறை மூலம் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாகனங்களில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டியுள்ள போலிகளை வட்டார போக்குவரத்து துறை மூலம் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் பொதுமக்களை யாராவது பத்திரிக்கையாளர் போர்வையில் மிரட்டினால் நீலகிரி செய்திமக்கள் தொடர்புத்துறை அலுவலர் அவர்களுக்கு 94980 42445 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகாரளிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்ததை நீலகிரி மாவட்ட செய்திமக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment