நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோத்தகிரி கன்னேரிமுக்கில் இரண்டு குழு குரங்குகள் நிரந்தரமாக டேரா அமைத்துள்ளது
பெண்கள் குழந்தைகளை அச்சுறுத்தி வந்த குரங்குகள் ஆண்களுக்கு பயந்துகொண்டிருந்தது ஆனால் தற்போது ஆண்களை கண்டு கூட பயன்படுவதில்லை.
வீடுகளுக்குள் புகுந்து உணவு பண்டங்களை தூக்கிச் சென்று வீட்டின் மேற்கூறைகளில் அமர்ந்துகொண்டு தின்பண்டங்களை பாதி உண்பதும் மீதியை வாரிஇரைப்பதும் ஆக இருப்பதுடன் மேற்கூரை ஓடுகளை சேதப்படுத்துவது உலர வைத்துள்ள துணிகளை சேதப்படுத்துவது குரங்குகள் குழுக்களுக்குள் சண்டையிட்டு அச்சுறுத்துவது விவசாய பயிர்களை சேதப்படுத்துவது என பலவழிகளில் சேட்டைகளில் ஈடுபடுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர். ஆகவே வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கன்னேரிமுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment