நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது கெந்தளா கிராமம் இங்கு வசிப்பவர் சுரேஷ் இவருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கிணறு ஒன்றை அனுமதி இல்லாமல் வெட்டி வந்துள்ளார். அதில் பாறைகள் சிக்கவே ஆட்களை வைத்து சில மாதங்களாகவே உடைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கிணற்றின் உள் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் வருவாய்த் துறையினருக்கு தகவல் அளிக்கவே கிராம நிர்வாக அலுவலர் சுபத்ரா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு பின்பு கொலக்கம்பை காவல் துறையில் புகார் அளித்தார் இதனை தொடர்ந்து கொலக்கம்பை இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கிணற்றினுள் இறங்கி பார்த்தபொழுது 40 அடி ஆழத்தில் பாறைக்கு வெடி வைத்துள்ளதையும், இதற்காக பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தோட்ட உரிமையாளர் சுரேஷ் என்பவரை (வயது57) கைது செய்து குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்கா கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்


No comments:
Post a Comment