மனிதர்கள் பணத்தாள் மீது எழுதுவதை தவிர்த்திட வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி பல அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ள நிலையில் மக்கள் திருந்தவில்லை என தன்னார்வலர்கள் வருந்துகின்றனர்.
இன்றைய நவீன கால சூழ்நிலையில் மக்கள் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கு படையெடுக்காமல் தங்கள் போன் மூலமாகவே வங்கிபரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இரவு நேரங்களில் மருத்துவ தேவை மற்றும் பிற தேவைகளுக்கு வங்கி ஏடிஎம் களில் பணத்தை டெபாசிட் செய்யும்பொழுது இப்படி பணத்தாள் மீது எழுதப்பட்ட தொகையை பணம் செலுத்தும் இயந்திரம் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி தந்துவிடுகிறது. இதனால் பணத்தை அவசர தேவைகளுக்கு டெபாசிட் செய்யமுடியாமல் மக்கள் திணறி நின்றிருந்த காட்சியை காணமுடிகிறது. ஆகவே பொதுமக்கள் பணத்தாள் மீது எழுதுவதை தவிர்த்திட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment