உதகையில் உள்ள வண்டி சோலை என்ற பகுதியில் வசித்து வருபவர் நந்தினி என்ற பட்டதாரி இளம் பெண். இவர் நாள்தோறும் இரவு 9 மணி முதல் 12 மணி வரை சுமார் 50 தெரு நாய்களுக்கு நாள்தோறும் உணவு அளித்து வருகிறார். ஒவ்வொரு நாய்களுக்கும் பல பெயர்களை வைத்து இவர் அழைக்கும் போது வாயில்லா ஜீவன்கள் இவரை சூழ்ந்து கொண்டு இவரிடம் பாசமாக இருப்பதை காண முடிகிறது.
மேலும் இவர் நாய்களுக்கு சாதம் மற்றும் சிக்கன் சூப் போன்றவற்றை நாள்தோறும் கொடுப்பதாக கூறுகிறார். மேலும் இவர் கூறும் பொழுது நாய்களுக்கு உணவளிப்பதால் இவர்களுக்கு மனநிறைவு ஏற்படுவதாகவும் இவருடைய பெற்றோர்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகும் கூறினார்.
தமிழக குரல் இணைத்தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment