நீலகிரி மாவட்டம், குன்னூர் ஆழ்வார்பேட்டையில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் மலைவாழ் மகளிர் மேம்பாட்டு சங்கம் சார்பில் உதகை,குன்னூர், கோத்தகிரி பகுதியில் இயங்கிவரும் மாலை நேர இலவச டியூஷன் வகுப்புகள் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் நீலகிரி மாவட்ட சமூகத்தன்னார்கள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சுரேஷ் ரமணா மற்றும் பேபியோ பவுண்டேசன் " நீலகிரியின் மாயக்குரல் "
மோகன்ராஜ் , ஊக்கம் பவுண்டேஷன்,கோவை ரோட்ராக்ட் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மலைவாழ் மகளிர் மேம்பாடு சங்கத்தின் தலைவர் ராணி தலைமையில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment