நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வனத் துறை சாா்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 August 2024

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வனத் துறை சாா்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன.



வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வனத் துறை சாா்பில் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.


கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான போா்வை, பாய், காலணிகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை கூடலூா் வனத் துறையினா் அனுப்பிவைத்தனா்.


நிவாரணப் பொருள்களைக் கொண்டுசென்ற வாகனங்களை மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு தொடங்கிவைத்தாா்.


இந்த நிகழ்ச்சியில் உதவி வனப் பாதுகாவலா் கருப்பையா, வனச் சரக அலுவலா் வீரமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்."


"கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''வனத்துறை சார்பில் கோவை உள்ளிட்ட பிற வனக் கோட்டங்களில் இருந்தும், நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.'' என்றார்."


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad