பெண்ணையும் சிறுமியையும் காத்த யானை! வயநாடு நிலச்சரிவில் சுஜாதா என்ற பெண்ணின் வீடும் சிக்கியது. இடிபாடுகளில் இருந்து தனது பேத்தியுடன் தப்பித்த அவர், அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் தஞ்சமடைந்திருக்கிறார். ஆனால், அங்கு ஒரு காட்டு யானையை அவர்கள் மிக அருகில் சந்திக்க நேர்ந்திருக்கிறது. "நாங்கள் ஏற்கெனவே உயிர் தப்பி வந்திருக்கிறோம். எங்களை எதுவும் செய்ய வேண்டாம்” என யானையிடம் வேண்டிக் கொண்டு, மரத்தடியில் படுத்திருக்கின்றனர். அவர்கள் வேண்டியபடி, பெண் யானை அவர்களுக்கு அருகிலேயே நின்று பாதுகாத்திருக்கிறது. விடிந்ததும் மீட்க ஆட்கள் வந்த பிறகுதான், யானை அங்கிருந்து
சென்றதாக கூறுகிறார் பாதிக்கப்பட்ட பெண்மணி சுஜாதா தமிழக குரல் கோத்தகிரி செய்தியாளர் C . விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment