மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற குறுமைய விளையாட்டு போட்டியில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குறுமைய விளையாட்டு போட்டிகள் நஞ்சைய லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது மாணவிகளுக்கான கேரம் போட்டி நடைபெற்றது இதில் 30 க்கும் மேற்பட்ட அரசு,மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்,மெட்ரிக் பள்ளிகள் கலந்து கொண்டன இளையோருக்கான (14 வயதிற்கு உட்பட்டோர்) ஒற்றையர் கேரம் பிரிவில் காரமடை அடுத்துள்ள வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி k. காவியா முதலிடம் பெற்று வாகை சூடி உள்ளார் மேலும் இரட்டையர் பிரிவில் இப்பள்ளி மாணவிகள் k.காவியா மற்றும்A.சாருமதி முதலிடம் பெற்று வாகை சூடிய வெற்றி பெற்ற மாணவர்களையும் வெற்றிக்கு பாடுபட்ட முனைவர் G.ராஜகுமார் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் செல்வி தனுஷியா உடற்கல்வி ஆசிரியை ஆகியோரை இப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு S சாக்ரடீஸ் குலசேகரன், ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் D.ராமதாஸ் மற்றும் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் திருமதி பேபி ஆகியோர் பாராட்டினார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்


No comments:
Post a Comment