நீலகிரி மாவட்டம் உதகை M.பாலடா பகுதிக்கு உட்பட்ட ஒட்டு மாரா ஒசஹட்டி என்னும் பகுதியில் இரண்டு நாட்களாக பெய்து வரும் காற்றுடன் கூடிய கனமழையால் இன்று காலை சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி அதிகாரிகள் உடனடியாக ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் உள்ள மண் சரிவை அகற்றி சாலைகளை சுத்தம் செய்து கொடுத்தனர். இதனால் அந்த வழியில் செல்லும் வாகனங்கள் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டாலும் இவர்கள் மண் சரிவினை சுத்தம் செய்த பின்பு வழியில் செல்லும் வாகனங்கள் சீராக செயல்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment