மோசமான காலநிலையையும், மழையையும் பொருட்படுத்தாமல்,துரித சேவை செய்த காவல் கண்காணிப்பாளர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் நடந்த, முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ், காவல்துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் I.P. S. அவர்கள், பந்தலூர் அரசு மருத்துவமனை, கூவமூலா இடைநிலைப்பள்ளி, பழங்குடியினர் கிராமம் மற்றும் நியாய விலை கடை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
மேலும் கூவமூலா பழங்குடியினர் கிராம மக்களை நேரில் சந்தித்து, அவர்களது தேவைகளை கேட்டு அறிந்து, தனது அறிக்கையினை நீலகிரிமாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்களிடம் சமர்ப்பித்தார்.
காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவருடன் சென்ற காவல்துறை குழுவிற்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நன்றியை தெரிவித்தனர்.
கோத்தகிரி லிருந்து தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment