நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் சிவப்பு எச்சரிக்கை அறிவித்த நிலையில் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சி இந்திரா நகர் என்னும் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததில் கணேசன் தயானி மற்றும் சேகர் கருப்பையா இரண்டு வீடுகள் சேதம் அடைந்த நிலையில் இதனை இன்று 18 07 2024 வியாழக்கிழமை. குந்தா தாலுகா தாசில்தார் கலைச்செல்வி வருவாய் ஆய்வாளர் அனுராதா வி ஏ ஓ தினேஷ்குமார் கிராம உதவியாளர் ராம்கி மற்றும் கோகுல். சேதம் அடைந்த வீட்டு நபர்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு ரூபாய் 8000 நிதி உதவியும் நிவாரண பொருட்களையும் வழங்கினர்..
மற்றும் சிறிதாக சேதம் அடைந்திருக்கும் வீடுகளில் உள்ள மக்களை உடனடியாக மாற்று வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் இல்லையேல் மாவட்ட ஆட்சியர் மூலம் அமைத்து தந்த பெரியார் நகர் பகுதியில் உள்ள முகாமிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment