நீலகிரி மாவட்டத்தில் ஜூலை, 4ம் தேதி துவங்கிய தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் அதிகளவில் மழை பெய்துள்ளது.
மாவட்ட நிர்வாக கணக்கெடுப்பு படி மாவட்ட முழுவதும் கன மழை; பலத்த காற்றுக்கு இதுவரை, 240க்கும் மேற்பட்ட மரங்களை அகற்றியதாக தெரிவித்துள்ளனர். மழைக்கு கூடலுார், பந்தலுார் பகுதிகளில் வாழை, இஞ்சி உள்ளிட்ட மலைப்பயிர்கள் அதிகளவில் சேதமாகியுள்ளன. பக்கவாட்டு சுவர் இடிந்து, 105 வீடுகள்; 4 வீடுகள் முழுமையாக சேதமாகியுள்ளது.
குடியிருப்பு, பள்ளி மற்றும் சாலையோரங்களில் அபாயகரமாக உள்ள மரங்கள் குறித்து பொதுமக்கள் தரும் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு மேற்கொண்டு அகற்றும் பணியும் ஒருப்புறம் நடந்து வருகிறது. பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் அந்தந்த தாலுகாவில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர், 24 மணி நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதளம் செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment