நீலகிரி தேயிலை விவசாயிகள் குமுறல். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 July 2024

நீலகிரி தேயிலை விவசாயிகள் குமுறல்.


நீலகிரி தேயிலை விவசாயிகள் குமுறல்.


நீலகிரி மாவட்டத்தில் பொருளாதாரம் பெருமளவு தேயிலை விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளது.


மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டுமே காய்கறிகள் விவசாயம் நடைபெறுகிறது.


தேயிலை விவசாயிகள் வழங்கும் பச்சைதேயிலைக்கு குறைந்த பட்ச ஆதாரவிலையாக ரூபாய் 30 நிர்ணயம் செய்யவேண்டும் என விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன.


தென்னிந்திய தேயிலை வாரியம் குறைந்த விலைக்கு விற்க்கும் தேயிலை தூள் அடிப்படையில் வாரவிலை நிர்ணயிக்கிறது.


மாவட்டத்தில் அருகருகே இருக்கும் தேயிலை தொழிற்சாலைகளில் விவசாயிகள் ஒரே இலையை இரண்டு தொழிற்சாலைகளுக்கு பிரித்து வழங்கிய நிலையில் பச்சை தேயிலை கொள்முதல் விலைகளில் வேறுபாடு உள்ளது என விவசாயிகள் குமுறுகின்றனர்.


நீலகிரி விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் இளித்தரை என்.விஸ்வநாதன் அவர்கள் கூறுகையில்.....


பச்சை தேயிலை கொள்முதலுக்கு குறைந்த பட்ச விலையாக   ரூபாய் 30 நிர்ணயம் செய்யவேண்டும் என அரசை மட்டும் குறை கூறி போராட்டம் நடத்தும் சில விவசாய சங்கங்கள் கலப்படம் செய்து குறைந்த விலைக்கு விற்க்கும் தேயிலை தொழிற்சாலைக்கு எதிராக போராடுவதில்லை ஏன் அவர்கள் கையூட்டு பெற்றுக்கொண்டு விவசாயிகளை தவறாக வழி நடத்துகின்றனவா என கேள்வி எழுப்பினார்.


விவசாயிகள் நல்ல பச்சை தேயிலை கொழுந்துகளை வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தென்னிந்திய தேயிலை வாரியம் பரிந்துரைத்து பச்சை தேயிலைக்கு குறைந்த பட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்தால் மட்டுமே கலப்பட தொழிற்சாலைகள் ஒழிந்து நல்ல விலை கிடைக்கும் என கூறினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad