நீலகிரி மாவட்டம் இத்தலாரில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆறுதல் கூறச்சென்ற தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா. ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகளை பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு ஏற்கனவே நிலச்சரிவு அபாயம் பற்றி மனு அளித்திருந்தோம் அதிகாரிகள் ஒன்றிரண்டு பேர் மட்டும் வந்து பார்வையிட்டுசெல்கின்றனர் நடவடிக்கை இல்லை என கூறி கூச்சலிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததால் கூச்சலிட்டவர்கள் அமைச்சரிடம் பாதிப்புகள் பற்றி விளக்கிகூறினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment