கோத்தகண்டி எமரால்டு முதல் இத்தலார் செல்லும் சாலையில் மண் சரிவு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 July 2024

கோத்தகண்டி எமரால்டு முதல் இத்தலார் செல்லும் சாலையில் மண் சரிவு


கோத்தகண்டி எமரால்டு முதல்  இத்தலார்  செல்லும் சாலையில் மண் சரிவு 


நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எமரால்டு அவலாஞ்சி மஞ்சூர்  போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு இது ஒரு முக்கிய வழித்தடம் ஆகும். அங்கு இத்தலார் என்னும் பகுதியிலிருந்து எமரால்டு செல்லும் சாலைகளில் இந்த இரண்டு நாட்களாக அதிக கனமழையின் காரணமாக இந்த மண்சரிவுகள் ஏற்படுகின்றது. இந்த முக்கியமான வழித்தடத்தில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் உதகை மற்றும் பிற இடங்களுக்கு செல்லும் அனைவரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மற்றும் இதனால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மண்கள் சரிந்து சாலைகளில் மண்கள் சேராக இருப்பதால் இரு சக்கரத்தில் வரும் வாகன ஓட்டிகள் தவறி விழும் வாய்ப்பு அதிகமாக உள்ளது ஆகையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கவனத்துடன் பொறுமையாக செல்ல வேண்டும் என நமது தமிழக குரல் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு  சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad