நீலகிரி மாவட்டம் உதகைக்கு கோவையில் உள்ள அனுகிரஹம் என்னும் முதுகு தண்டுவடம் பாதித்தோர் பாதுகாப்பு இல்லத்தை கடந்த 6 ஆண்டுகளாக நடத்தி வரும் திரு. ரவிச்சந்திரன் அவர்களுடன் 55 பேர் கொண்ட குழுவினராக வந்திருந்தனர். உதகை பூங்காவை தங்கள் சக்கர நாற்காலிமூலம் சுற்றிபார்த்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதுகு தண்டுவடம் பாதித்தோருக்கான காப்பக இல்லம் இந்தியாவிலேயே கோவையில் மட்டுமே உள்ளது என்றும் இது அரசு பதிவுபெற்ற காப்பகமாக உள்ளது தண்டுவட பாதிப்புடன் நடக்க இயலாத பாதிப்புடன் வருவோருக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்படுகிறது என்று திரு. ரவிச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.
பூங்காவை சுற்றிபார்த்து விட்டு பேருந்தில் ஏறிச்செல்ல பூங்காவிற்க்குள் பேருந்தை அனுமதித்து உதகை போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் ராகம் தொலைக்காட்சி குழுவினர் உதவி புரிந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment