இன்று நீலகிரி மாவட்ட கேரட்டிற்க்கு ஏல விற்பனையில் ராசி ரூபாய் 110 முதல் ரூபாய் 130 வரை ஏலம்போனதில் நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் இளித்துரை திரு N. விஸ்வநாதன் அவர்கள் கூறுகையில் நீலகிரி கேரட் மண்ணின் தன்மை மற்றும் இயற்கை விவசாயம் முறையில் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்க்கிடையே பயிரிடுவதாகவும் நீலகிரி கேரட்டில் அதிக ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. ஆகவேதான் நீலகிரி கேரட்டை தேடி வந்து வாங்குகின்றனர் என்றும். சில வியாபாரிகளின் சூழ்ச்சியால் நீலகிரி கேரட் விவசாயம் பாதித்தது என்றும் விவசாயிகள் மற்றும் நல்ல பல வியாபாரிகளின் ஒத்துழைப்பினால் நீலகிரி கேரட் விவசாயம் காக்க போராடி பல நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக இந்த விலை கிடைத்ததில் நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததாகவும் நீலகிரி விவசாயிகள் நல சங்கம் மேலும் பல வகைகளில் விவசாயிகளுக்கு உதவும் என்றும் தெரிவித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment