நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரியில் பிரன்சு தினத்தை முன்னிட்டு பிரஞ்சு துறை சார்பில் நடனப் போட்டி நடைபெற்றது. சுழல் காற்று என்று பெயரிடப்பட்டது. உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் இருந்து 18 பள்ளிகள் கலந்து கொண்டன.
புனித ஆங்கிலோ இண்டியன் பள்ளியின் பிரஞ்சு ஆசிரியர் திரு. தமிழ்மணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
சிந்தியா ஜார்ஜ் அவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆக இருந்தார். நடுவர்களாக நடனம் பள்ளிகளை சேர்ந்த ஆல்வின் மற்றும் ஆகாஷ் ஆகியோர் பங்கேற்றனர் முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஷீலா மற்றும் அருட்சகோதரி அல்போன்சா ஆகியோர் அனைவரையும் வரவேற்றார்கள்.
நடன போட்டியில் ஹோலி இன்னசென்ட் பள்ளி முதல் இடம், ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி இரண்டாம் இடம், புனித ஜோசப்ஸ் பள்ளி மூன்றாம் இடம் பெற்றுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிராவிடன்ஸ் கல்லூரி பிரஞ்சு துறையினர் சிறப்பாக செய்திருந்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.



No comments:
Post a Comment