முள்ளிகூர் பஞ்சாயத்து காந்திகண்டி பகுதியில் அரசு பள்ளியை சேதப்படுத்திய கரடி
நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காந்திகண்டி என்னும் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கரடி அட்டூழியம் மிகவும் அதிகமாக உள்ளது. இதை வனத்துறையிடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் மற்றும் நேற்றைய தினத்தில் காந்தி கண்டி பள்ளியில் இரவு நேரத்தில் கரடி உலா வந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய சேதம் ஏற்படுவதற்கு முன் வனத்துறையினர் இதனை நினைவில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment