ரேஸ் கோர்ஸ்-யின் புதிய தோற்றம் என்ன? - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 19 July 2024

ரேஸ் கோர்ஸ்-யின் புதிய தோற்றம் என்ன?



 நீலகிரி மாவட்டம் மத்திய பேருந்து நிலையத்தின் எதிர்ப்புறம் அமைந்துள்ளது இந்த ரேஸ் கோர்ஸ் என்னும் பகுதி.. இங்கே குதிரை பந்தயம்  விளையாட்டு மிகவும் முக்கிய விளையாட்டாக அமைந்திருந்தது இந்த விளையாட்டினால் பல கூலி தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற பலர் இங்கு வந்து பணத்தை தொலைத்து விட்டு தான் சென்றார்கள் என கூறப்படுகிறது. இப்பொழுது ஒரு சில வாரங்களுக்கு முன்பு ரேஸ்கோர்ஸ் பகுதியை தோட்டக்கலையாக மாற்றி அமைக்க போகிறார்கள் என்று அரசாங்கத்துறை அறிக்கை வெளியிட்டதன் பேரில் பொதுமக்களுக்கு மிகவும் ஆனந்தமாக உள்ளது.


 ஊட்டியின் சிறப்பு அம்சங்களே பூங்காக்கள் மற்றும் மலை ரயில் போன்றவைகள் தான் அதிகமாக கோடை சீசன்களில் மலர்கண்காட்சியைக் காண இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உதகையில் குவிந்து வருவார்கள் இப்பொழுது புதிதாக ரேஸ்கோர்ஸ் எனும் பகுதியை தோட்டக்கலையாக மாற்றியமைக்க உத்தரவு அளித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பின்பு உதகையில் பார்க்கிங் வசதி என்றாலே பெரும் சிரமம் என்பது எல்லாரும் அறிந்ததாகும். ரேஸ் கோர்ஸில் ஒரு பகுதியை பார்க்கிங் வசதியாக அமைத்து தருவதால் சீசன் நேரங்களில் வாகன இடையூறுகள் ஏற்படாமல் மிகவும் உதகை இன்னும் கூடுதல் அழகை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad