நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆட்டு கொட்டகையில் அடைத்து வைத்திருந்த இரண்டு ஆடுகளை கடித்துக் கொன்ற வனவிலங்கு பொதுமக்கள் அச்சம்.
நீலகிரி மாவட்டத்தை பொருத்தளவில் வனவிலங்குகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள ஏற்றம் வயல் பகுதியை சேர்ந்தவர் ரவி இவருடைய இரண்டு ஆடுகளை கொட்டகையில் அடைத்து வைத்துள்ளார் .இரவு வேளையில் மர்ம விலங்கு இரண்டு ஆடுகளையும் கடித்துக் கொன்றது தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்தில் சென்று ஆடுகளை கொன்றது சிறுத்தையா புலியா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .குடியிருப்பு பகுதியில் வளர்ப்பு ஆடுகளை மர்ம விலங்கு அடித்துக் கொன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment