நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு அணை மற்றும் அவலஞ்சி அணைகள் பேர் போன அணைகளாக திகழ்ந்து வருகின்றன. இவ்விரு அணைகளுக்கு போதிய மழை இல்லாத காரணத்தினால் எமரால்டு மற்றும் அவலாஞ்சி அணைகள் எந்த வருடமும் எதிர்பார்க்காத அளவிற்கு வரண்டு போய் காட்சியளித்தது. இந்த அணைகளை நம்பி பல்வேறு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.
இதனால் வருத்தத்துடன் இருந்த பொது மக்கள் மற்றும் விவசாயிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கிய காற்றுடன் கூடிய தொடர் கன மழையால் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளில் நீர்வரத்து காணப்படுகின்றது. இதுபோன்று நீர்வரத்து விரைவாக நிரம்பும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.. நீர்வரத்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகவதால் விவசாயிகளும் மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment