கோத்தகிரி- கலைஞர் நூற்றாண்டு விழா -5ஆம் ஆண்டு ரத்ததான முகாம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 July 2024

கோத்தகிரி- கலைஞர் நூற்றாண்டு விழா -5ஆம் ஆண்டு ரத்ததான முகாம்.




தி.மு.க இளைஞரணி மாநில தலைவர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துகளோடு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் ஆலோசனை படியும் நீலகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு‌ .ஆ .ராசா அவர்களின் ஆலோசனை  படியும் , திமுக நீலகிரி  மாவட்ட செயலாளர்  திரு‌.ப .மு .முபாரக்  அவர்கள் வழி காட்டுதல் படியும்   சுற்றுலாத்துறை அமைச்சர்  கா. ராமச்சந்திரன் அவர்கள் வழிகாட்டுதலின்படியும் திமுக விளையாட்டு மேம்பாட்டு துறை மாநில துணை செயலாளர்  திரு‌. வாசிம் ராஜா அவர்களின் வாழ்த்துகளோடு இன்று கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் 5 ம் ஆண்டு இரத்ததானம் முகாம் நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்றத் திற்குட்பட்ட கோத்தகிரி ஒன்றியத்தில் USWA மாவட்ட பொருளாளர் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு. V.மணிகண்டராஜ் அவர்களின் ஏற்பாட்டில் திமுக ஒன்றிய செயலாளர்  திரு‌ .நெல்லை கண்ணன் அவர்கள் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி மேலும் மாவட்ட ஊராட்சி தலைவர் திரு. பொன்தோஸ்  மற்றும் கோத்தகிரி பேரூராட்சி தலைவர் திருமதி. ஜெயகுமாரி ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.



இந்த முகாமில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகள், மற்றும் தன்னார்வலர்கள் இரத்ததானம் செய்தார்கள்  விழா தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடி கூட்டம் துவக்கப்பட்டது விழாவில்  திமுக தொண்டர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணை தலைவர் திரு. சிவப்பிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் திரு. வின்சென்ட் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மணிகண்டன், சில்வர் ஒன்றிய பொறுப்பாளர் ஸ்டீபன் TK சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.



தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad