பந்தலூரில் அமைச்சர், ஆட்சியர் ஆய்வு. இன்று( ஜூலை 1) பள்ளிகள் விடுமுறை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 1 July 2024

பந்தலூரில் அமைச்சர், ஆட்சியர் ஆய்வு. இன்று( ஜூலை 1) பள்ளிகள் விடுமுறை.


நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூரில் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தொடர் கன மழை காரணமாக ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


தமிழக மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. க. ராமச்சந்திரன் அவர்களுடன் நீலகிரி  மாவட்ட ஆட்சியர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்களும் இணைந்து நிலச்சரிவு மற்றும் பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்கினர். இன்று (ஜூலை 1) கூடலூர் மற்றும் பந்தலூர் தாலூக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்தார்கள்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad