நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக கூடலூர், பந்தலூர், உதகை,குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய இடங்களில் கனமழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. நேற்று நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று ( ஜூலை17) நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று மொகரம் காரணமாக பள்ளிகளுக்கு அரசுவிடுமுறை உள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment