நீலகிரி மாவட்டத்தில் உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற பள்ளி மாணவ மாணவியருக்கு ரூபாய் 15000 ஆயிரம் பரிசு தொகையும் பாராட்டு சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகின்றன இந்த திட்டத்தின் கீழ் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான மாணவ மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் பெறுகின்றன. திருக்குறள் முற்றோதலில் பங்கேற்கும் மாணவ மாணவியர்கள் 1330 குறட்ப்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் திருக்குறளில் உள்ள இயல் எண் அதிகாரம் குறள் எண் குறளின் பொருள் திருக்குறளின் அடைமொழி சிறப்புகள் சிறப்பு பெயர்கள் உரை எழுதியவர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும். முற்றோதலில் பங்கேற்கும் மாணவ மாணவியர்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறிக் குழுவின் முன்னிலையில் நேராய்வு உட்படுத்தப்பட்டு குரல் பரிசுக்குரியோர் பட்டியலில் சென்னை தமிழ் வளர்ச்சி இயக்குனரால் பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்து கொள்ள இயலாது. திருக்குறள் முற்றோதலுக்கனா விண்ணப்பங்களை நீலகிரி மாவட்ட தலைமை வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் பெறலாம்.
அதுமட்டுமல்லாமல் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை 31 8 2024 ஆம் தேதிக்குள் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உதகமண்டம் என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்ப பெறுதல் வேண்டும். அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment