பாஜகவுக்கு நீலகிரி மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்கு சதவீதம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 7 June 2024

பாஜகவுக்கு நீலகிரி மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்கு சதவீதம்

       


  நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எல் முருகன் கொங்கு மண்டல அளவில் அதிக வாக்குகளை   , அதிக வாக்கு சதவீதத்தை மலைப்பகுதி தொகுதிகளும் வழங்கி கை கொடுத்தன.      கோவை லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கொங்கு மண்டலத்தில் அதிகபட்சமாக 4.50 லட்சம் ஓட்டுகளை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக நீலகிரி லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேல்முருகன் 2.32 லட்சம் ஓட்டு பெற்றுள்ளார். 


வழக்கமாக திமுக அதிமுக இடையே நேரடி போட்டி நிலவிவந்த தொகுதியில் பாஜக கட்சி மும்முனை போட்டியை ஏற்படுத்தியது.   நீலகிரி மலை மாவட்டத்தில் ஊட்டி குன்னூர் கூடலூர் சட்டசபை தொகுதிகள் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி ஈரோடு மாவட்டத்தில் பவானி சேகர் என ஆறு சட்டசபை தொகுதிகளை நீலகிரி லோக்சபா தொகுதி உள்ளடக்கியிருக்கிறது மொத்தம் பதிவான ஓட்டுகள் 10.13 லட்சம் இதில் பாஜக வேட்பாளர் முருகன் பெற்ற ஓட்டுகள் 2.32 லட்சம் பூட்டி சட்டசபை தொகுதி 36,631 கூடலூர் 27,454 குன்னூர் 29,230 ஓட்டுகள் என மலை மாவட்டத்தில் பாஜகவுக்கு 93 ஆயிரத்து 345 ஓட்டுகள் கிடைத்துள்ளன. சமவெளி தொகுதிகள் ஆன பவானிசாகர் 37,66 மேட்டுப்பாளையம் 52,324 அவிநாசி 48,206 ஓட்டுகள் என ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 796 ஓட்டுகள் கிடைத்துள்ளன. மதுரை மாவட்ட தொகுதிகளை விட சமவெளியில் பாஜாகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன ஆனால் வாக்கு சதவீதத்தை கணக்கில் கொண்டால் சமவெளி தொகுதிகளை விட குறைந்த வாக்குகள் கொண்ட உதகை குன்னூர் கூடலூர் சட்டமன்ற தொகுதிகளில் தான் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது திராவிட கட்சிகளுக்கு இணையாக பாஜாகவினர் பிரச்சாரம் செய்தனர். 


அதே நேரத்தில் மாற்றத்தை விரும்புவோர் புதிய வாக்காளர்கள் என பலர் பாஜகவிற்கு ஓட்டளிக்க முன்வந்துள்ளனர். இதுவரை இரண்டு திராவிட கட்சிகள் மட்டுமே போட்டியிலிருந்து நிலையில் தேசிய கட்சியாகவும் மத்தியில் ஆளுங்கட்ச்சியாகவும் இருக்கும் பாஜக தமிழகத்தில் டெபாசிட் கூட வாங்குவது என கிண்டல் செய்தவர்கள் வாயடைக்கும் வகையில் சிறப்பான வாக்கு அங்கே உருவாக்கி 2026 இல் வலிமையாக களம் இறங்குவோம். என அடுத்த களத்திற்கு தயாராவதாக பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூறுகின்றனர் . 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad