தொட்டூர் தாந்தநாடு காங்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 28 June 2024

தொட்டூர் தாந்தநாடு காங்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டது.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி (சிறப்பு நிலை) பேரூராட்சிக்கு உட்பட்ட தாந்தநாடு தொட்டூரில் அமைந்துள்ளது ஹிரியோடையா கோயில்.

இந்த கோயில் படுக தாந்தநாடு ஹெத்தப்ப மக்களின் குல தெய்வ கோயில் ஆகும்.


தாந்தநாடு ஹட்டியின் நடுவில் அமைந்துள்ள ஹிரியோடையா கோயிலில் ஆண்டுதோறும் படுகர்களின் தெவ்வஹப்பா எனும் திருவிழாவில் மண்டெதண்டு என்னும் ஆச்சார குல தெய்வ வழிபாடு நடைபெறும்.


தாந்தநாடு பேருந்து நிறுத்தத்திலிருந்து ஹட்டியில் உள்ள வீடுகளுக்கும் கோயிலுக்கும் செல்லும் பாதை மண் சாலையாக குண்டும் குழியுமாக அதிக காலமாக இருந்தது இந்த நடைபாதையில் பள்ளி செல்லும் குழந்தைகளும் முதியோர்களும் செல்ல சிரமப்பட்டனர்.



அதிக கால முயற்ச்சிக்கு பிறகு கோத்தகிரி ( சிறப்பு நிலை) பேரூராட்சி நிர்வாகத்தால் நிதி ஒதுக்கப்பட்டு தாந்தநாடு பேருந்து நிறுத்தம் முதல் ஹட்டிக்குள் உள்ள கோயில் வரை செல்லும் பாதை கான்கிரீட் சாலையாக அமைக்கப்பட்டது தாந்தநாடு மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த வாரம் தொட்டூரில் படுகர்களின் குலதெய்வ திருவிழாவான தெவ்வஹப்பா மற்றும் மண்டெதண்டு ஹப்பா நடைபெறும் சமயத்தில் இந்த காங்கிரீட் நடைபாதை அமைத்த பேரூராட்சி நிர்வாகம் மற்றும் இந்த பாதை வர உறுதுணையாக இருந்து கூடவே இருந்து கண்காணித்து செய்து கொடுத்த


கவுன்சிலர் நஞ்சு என்கிர சுப்ரமணி அவர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad