உதகை நகராட்சி நிர்வாகத்திற்கு நாக்குபெட்டா படுகர் நல சங்கம் கண்டனம் . - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 21 June 2024

உதகை நகராட்சி நிர்வாகத்திற்கு நாக்குபெட்டா படுகர் நல சங்கம் கண்டனம் .



நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி ஜூன்13 ஆம் தேதி ஒரு தீர்மானம் நிறைவேற்றி உதகை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்ந்த தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.


இந்த நிலையில் நீலகிரி மாவட்ட நாக்குபெட்டா படுகர் நல சங்கத்தினர் பத்திரிக்கையாளர் சந்திப்பில்...

உதகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் மட்டுமே உதகை நகராட்சி நிர்வாகம் வளர்ச்சி பணிகள் செய்யலாம் அதை விடுத்து கேத்தி, நஞ்சநாடு, இத்தலார், தொட்டபெட்டா, உல்லத்தி ஆகிய கிராம பஞ்சாயத்துக்களின் மக்கள் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக கருத்துரு வழங்கியதை கண்டிப்பதாகவும், நீலகிரி மாவட்டம் 74 சதவிகிதம் விவசாய பகுதியாக உள்ளது அதிக அளவு கிராமப்பகுதிகளை கொண்டது தொழிற்சாலைகளோ மற்றும் பெரிய தொழில்நிறுவனங்களோ மக்கள் அடர்த்தியோ இல்லாத இடமாகும் ஆகவே உதகை நகராட்சியை மாநகராட்சியாக மாற்றினால் ஏற்கனவே பொருளாதாரத்தில் நலிவடைந்த நீலகிரி மக்களின் தலையில் வரிச்சுமை அதிகரித்து மக்கள் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகும் நிலை உருவாகும் என்றும்.


 நகராட்சி பணியாளர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு உட்பட சலுகைகள் கிடைக்கும் பொதுமக்களின் பாடு திண்டாட்டத்தில் முடியும் எனவும்  உதகை நகராட்சியை மாநகராட்சியாக உயர்வு செய்ய பரிந்துரைத்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாக்குபெட்டா படுகர் நல சங்கத்தின் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர். தாமதித்தால் கிராம பஞ்சாயத்து மக்களை ஒன்று திரட்டி கண்டனம் தெரிவிப்பதுடன் மாபெரும் சட்ட போராட்டம் நடத்த வேண்டிவரும் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad