அரசு பள்ளிகளை அரவணைக்கும் இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 6 June 2024

அரசு பள்ளிகளை அரவணைக்கும் இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்

  மாண்புமிகு நிதியரசர் கற்பக விநாயகம்     அவர்களின் வழிகாட்டுதல் படி அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நலிவடைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி வருகின்றனர். 


மேலும் பெண் குழந்தைகள் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அச்சம் தவிர் என்ற தேசிய விருது பெற்ற குறும்படத்தை தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக கோவை அன்னூர் பகுதியில் உள்ள காடாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் துவக்க பள்ளிக்கு தேவையான மின்விசிறி மற்றும் மின்விளக்குகளை அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆர். கே. குமார் , அகில இந்திய பொது செயலாளர் வி எச் சுப்பிரமணியம் மாநில மகளிர் அணி தலைவி தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜுனன் மாவட்ட மகளிர் அணி தலைவி எல். ஐ. சி. சாந்தி, ஆகியோர் துணைச் செயலாளர் ஜான் அந்தோணி கிறிஸ்டோபர் ஏற்பாட்டில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம்    அவர்களிடம் வழங்கினர். அப்பொழுது துணை செயலாளர் விஜயராவ் உடன் இருந்தார்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad