உதகை சாலைகளில் கால்நடை தொடர்கதை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 29 June 2024

உதகை சாலைகளில் கால்நடை தொடர்கதை.

 


உதகை சாலைகளில் கால்நடை தொடர்கதை.


நீலகிரி மாவட்டம் உதகையில் கால்நடைகள் சாலையில் திரிவதாக நமது தமிழக குரல் செய்தி தளத்தில் பலமுறை செய்திவெளியிடப்பட்டது. பல செய்திநிறுவனங்களும் தினந்தோறும் உதகை நகரில் கால்நடைகள் உதகை நகராட்சி நடவடிக்கை எடுக்குமா என செய்திகள் வெளியிட்டு அலுத்துவிட்டனர்.


தமிழக அரசு அபராதம் உட்பட ஏராளமான நடைமுறைகளை அறிவித்துள்ளது. செய்திகளின் இந்த காட்சி உதகை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் கண்களில் படுவதில்லையா அல்லது இது உதகை நகராட்சி ஊழியர்களின் கால்நடைகளா அதனால் தான் நடவடிக்கை எடுப்பதில்லையா, ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பார்கள் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad